WhatsApp : +91 99 434 765 87
பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவது எதனால்?
தாய்ப் பால் சரியாக குழந்தைக்கு கொடுக்க முடியாவிட்டால். குழந்தையின் உடலில் உள்ள பித்த நீர் முழுமையாக வெளியேறாமல் குழந்தைக்கு மஞ்சள் காமலை  வந்து விடும்.

தாய்ப்பால் கொடுக்க கொடுக்க குழந்தையின் உள்ளே உள்ள காட்டு பீ என்று சொல்லக் கூடிய கழிவு வெளியேறி உடலில் எதிர்ப்பு சக்தி தோன்றும். தாய்ப்பால் கொடுக்காவிட்டால் அந்தக் கழிவு உடலில் தங்கி கல்லீரலை பாதிக்கும், அதனாலேயே பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமலை வருகிறது.

அப்படி வந்த மஞ்சள் காமலை விரட்ட உடலுக்கு சூடு தேவை, ஆகவே தான் ஆஸ்பத்திரியில் லைட் பாக்ஸில் வைத்து குழந்தை எமர்ஜன்சி வார்ட்டில் வைத்திருப்பார்கள்.

அப்படி சூடான இடத்தில் வைத்திருக்கும் பொழுது எப்பொழுதெல்லாம் குழந்தைக்கு பசி எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த மஞ்சள் காமலை நோய் சரியாகிவிடும்.

இங்கு தாய்ப்பால் தான் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். தாய்ப் பால் கொடுத்தால் தான் உடலில் உள்ள பித்த நீரும் தேவையற்ற கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியத்தோடு குழந்தை வளரும்.

எனவே அனைத்து தாய்மார்களுக்கும் பணிவான வேண்டுகோள். குழந்தைக்கு எந்தளவிற்கு தாய்ப்பால் கொடுக்கின்றீர்களோ அந்த அளவிற்கு அந்த குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.

தாய் இல்லாமல் யாரும் இந்த உலகத்தில் திரம்பட வளர முடியாது. தாய்ப்பால்(தாயின் இரத்தம்) இல்லாமல் எந்தக் குழந்தையும் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிதான ஒன்று ஆகும்.

ஆகவே சில நேரத்தில் தாய்ப்பால் தாய் கொடுக்க முடியாவிட்டால். வாடகைத் தாய் ஏற்பாடு செய்து தாய்ப்பால் கொடுக்கவும். அதுவும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றும். ஆகவே எந்தக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க எந்த தாயாலும் முடிந்தால் அதை ஒரு உதவியாக கருணையாக செய்யுங்கள். உங்கள் தாய்ப்பால் ஒரு குழந்தையை நோயிலிருந்து உயிருடன் காப்பாற்றும்.